பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை

வீரகனூர் அருகே பெற்ற மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்;

Update: 2021-08-20 08:30 GMT

பெற்ற மகளையே பலாத்காரம் செய்த மகேந்திரன்

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள கிராமத்தில் கூலித் தொழிலாளி மகேந்திரன். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளதால் தாய் புஷ்பராணி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது, இதனால் அதிர்ச்சியடைந்த தாய் புஷ்பராணி தனது மகளிடம் விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது தந்தை மகேந்திரன் மகள் என்றும் பாராமல் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாய் புஷ்பராணி ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை மகேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

கொரோனா பரிசோதனை செய்த போலீசார் மகேந்திரனை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

Tags:    

Similar News