சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 36 கோடியே 50 இலட்ச ரூபாய் மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் .
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மும்முடி போலீஸ் சோதனைச் சாவடியில் நள்ளிரவில் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர், அதில் உரிய ஆவணமின்றி 36 கோடியே 50 இலட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 237 கிலோ 300 கிராம் தங்க நகைகளை சேலத்தில் உள்ள தனியார் நகை கடைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் கெங்கவல்லி, சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசனிடம் பிடிபட்ட நகையை ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சீல் வைத்து கருவூலத்தில் ஒப்படைத்து வேனில் வந்த ராஜேந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.