மகளிர் உதவி மையம் எண் 181: விழிப்புணர்வு செய்த காவல்துறை
மகளிர் உதவி மையம் எண் 181 குறித்து எடப்பாடி காவல்துறையின் சார்பில் பெண்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொலைபேசி எண் 181 ஐ அறிமுகபடுத்தி மகளிர் உதவி மையம் என அமைக்கப்பட்டு 24 மணி நேர உடனடி உதவி, அவசர உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் உரிமைகள் குறித்த தகவல்களை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் எடப்பாடி காவல்துறையின் சார்பில் காவல்துறை ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன் தலைமையில் தமிழக காவல்துறையின் மகளிர் உதவி மையம் எண் 181ஐ அவசர உதவிக்கு பயன்படுத்திக்கொள்ளும்படி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.