எடப்பாடி, சங்ககிரி கொரோனா நோயாளிகளுக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அன்னதானம்!

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் தயாரான உணவுகள், எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2021-06-01 05:59 GMT

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்குவதற்காக, எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தயாராகும் உணவுப் பொட்டலங்கள்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று முழு ஊரடங்கால், அனைத்து கோவில்களும் மூடப்பட்டு கோவில் ஊழியர்கள் மட்டுமே கோவில் வளாகத்தில் உள்ளனர்.

இதனால் அன்னதானத் திட்டத்தின் மூலம் சமைக்கப்படும் மதிய உணவை,  தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி எடப்பாடி அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தின் கீழ் சமைக்கப்படும் உணவுகளை, எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை, எடப்பாடி நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு வழங்குமாறு, நஞ்சுண்டேஸ்வர் கோவில் செயல் அலுவலர் கோகிலா உத்தரவிட்டார்.

இதையடுத்து, எடப்பாடி அரசு மருத்துவமனையில் 200 நபர்களுக்கும், சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு 250 நபர்களுக்கும், எடப்பாடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 50 பேருக்கும் என, மொத்தம் 500 பேருக்கு மதிய உணவு, கோவில் ஊழியர்களால் தயாரிக்கப்பட்டு தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News