கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மின்சார திருத்த சட்டம், தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தம், மற்றும், கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CITU) சங்கம் சார்பில், சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.
கொங்கணாபுரம் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்பட 26 பேரை, கொங்கணாபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.