எடப்பாடியில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
சேலம் மாவட்டம், எடப்பாடியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிகளில் நேற்று இரவு, காவல் ஆய்வாளர் பிராங்கிளின் உட்ரோ வில்சன், உதவி ஆய்வாளர் பெரியதம்பி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி கவுண்டம்பட்டி அம்மன் கோவில் பகுதியில் பதிமூன்று பேர் சேர்ந்த ஒரு கும்பல் சீட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
காவல்துறையினரை பார்த்து அவர்கள், அலறியடித்து தப்பிக்க முயற்சித்தனர். ஆனால் காவல்துறையினர் சுற்றி வளைத்து 13 பேரையும் கைது செய்தனர். கௌதம், ஆறுமுகம், மாது, தங்கபாண்டி, தங்கதுரை, கார்த்திகேயன், முருகேசன், பாலாஜி, செங்கோட்டையன், பெருமாள்,கிருஷ்ணன், உதயகுமார், பரத்குமார் ஆகிய 13 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 31 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், செல்போன் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.