எடப்பாடியில் 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்தும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.;

Update: 2021-05-20 10:18 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு நடைமுறையை கடுமையாக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் எடப்பாடி காவல்  ஆய்வாளர் உட்ரோ வில்சன் உத்தரவின்படி எடப்பாடி பஸ் நிலையம் அருகே பேரிகார்டு அமைத்து உதவி காவல் ஆய்வாளர்கள் பெரிய தம்பி, பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.  இதுவரை 700க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்தும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று ஒரேநாளில் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எடப்பாடி உதவி காவல் ஆய்வாளர் பெரியதம்பி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News