முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: சேலம் சுகாதாரத்துறை சுறுசுறுப்பு

Update: 2021-04-17 11:45 GMT

ஆவணியூர் புறவழிச்சாலை பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு, எடப்பாடி சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.

கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தை அச்சுறுத்தி வருகிறது. இதனை  கட்டுப்படுத்த, அரசுத் தரப்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும்  நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்றுப்பகுதியில், சுகாதாரத்துறையினர் இன்று, முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்தனர்.

சேலம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியின் உத்தரவின் பேரில் எடப்பாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே பன்னீர்செல்வம் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன், சரவணன் ஆகியோர்,  எடப்பாடி ஆவணியூர் புறவழிச்சாலை பகுதியில், முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ. 200  அபராதம் விதித்தனர்.

அத்துடன், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர். இப்பணியில், நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் இணைந்து, கொரோனோ தோற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News