சேலத்தில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு
பா.ஜ. மற்றும் அ.தி.மு.க. நீர் மோர் பந்தல்கள் திறந்தன;
பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாநகர அஸ்தம்பட்டி மண்டலம் சார்பில் வின்சென்ட் பகுதியில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை மாநகர தலைவர் சசிகுமார் நேற்று திறந்து வைத்து, தொடர்ந்து மக்களுக்கு நீர் மோர் வழங்கினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேவேளையில், ஆத்தூரில் அதிமுக சார்பில் தாலுகா அலுவலகம் எதிரே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலர் இளங்கோவன் இதனை திறந்து வைத்து, மக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்நிகழ்வில் நகர செயலர் மோகன், மாநில வர்த்தக அணி துணை செயலர் வரதராஜன், மாநில இலக்கிய அணி துணை செயலர் காளிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.