ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் - தன்னார்வலர்கள் நன்கொடை

கொரோனா நிவாரண உதவியாக, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டல் இயந்திரம், மருத்துவ உபகரணங்களை தன்னார்வல அமைப்பினர் வழங்கினர்.;

Update: 2021-06-02 05:32 GMT

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அரசு  தலைமை மருத்துவமனையில்,  கொரோனோ நோயாளிகளுக்கு போதிய  படுக்கை  வசதி இல்லை; ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள்   கடும்  அவதிக்குள்ளாகி  வருகின்றனர். இடப்பற்றாக்குறையால், அரசு  மருத்துவமனை  வளாகத்தில்  உள்ள  மரத்தடி மற்றும் சிமெண்ட்  தரையில் படுத்து, நோயாளிகள் காத்திருக்கும் அவலம் உள்ளது.

கொரோனா நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு கொரோனா நிவாரண உதவியாக பல்வேறு  தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை  செய்து  வருகின்றனர்.

அவ்வகையில், ஆத்தூர் ஜேசிஐ மற்றும் வளர்நிதி சிடபண்டஸ், ஆதவன் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட தன்னார்வல அமைப்பினர்கள் ஒன்றிணைந்து, இரண்டு லட்சம் ரூபாய்  மதிப்பிலான  ஆக்சிஜன்  செறிவூட்டல் இயந்திரம், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவிகள்,  என்95,  மாஸ்க்குகள், கொரோனா கவச உடைகள் உள்ளிட்ட  மருத்துவ  உபகரணங்களை, ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மல்லியகரை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர். வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில், இந்த உபகரணங்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம்  வழங்கப்பட்டது.

Tags:    

Similar News