ஆத்தூர் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ஆத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-01 07:00 GMT

ஆத்தூர் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 30வது வாட்டு ஏ எம் சி காலனிபகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் - கடலூர் சாலையில் லீ பஜார் பகுதியில் திடீரென காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்த ஆத்தூர் நகர போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்களும் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் உடனடியாக வழங்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News