தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியான கணவரின் உடலை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு

ஓச்சேரிஅருகே திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் கொரோனாவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கணவனின் உடலை மீட்டுத் தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு.

Update: 2021-06-05 07:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், முருகம்மாள் தம்பதியனர். கூலி வேலை செய்து வரும் அவர்களின் மகன் மகன் கோபிநாத், பிஇ முடித்து வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு தேன்மொழி என்பவருடன் திருமணம் நடந்து கோபிநாத் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த மே மாதம் 11 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் மருத்ததுவ மனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் அவருக்கு சரிவர மருத்துவ சிகிச்சை அளிக்காத காரணத்தால் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 22 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு அதி தீவிர கொரோனா நோய் தாக்கத்தால் உயிரிழந்தார்

மேலும் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே ரூ.4,30,000 ரொக்கமாக மருத்துவமனைக்கு செலுத்தியதாகக் கூறப்படுகிறது இந்நிலையில் மேற்கொண்டு ரூ.4,70,000 கட்ட வேண்டும் என்றும், அதன் பின்னர் தான் கோபிநாத்தின் உடலை தரமுடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத கோபிநாத்தின் மனைவி தேன்மொழி செய்வறியாது திகைத்து, மருத்துவமனையிலிருந்து தனது கணவன் கோபிநாத்தின் உடலை மீட்டுத் தரக்கோரி உறவினர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். ஆட்சியர் அம்மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் நம்பிக்கையோடு அனைவரும் சென்றனர்.

#Instanews #Tamilnadu #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #Ranipet #Ocheri #Corona #Death #CMC #Hospital Bill #Collector #Petition #சோளிங்கர் #ஓச்சேரி #கொரோனா #மரணம் #சிஎம்சி #மருத்துவ கட்டணம் #மாவட்டஆட்சியர் #மனு

Tags:    

Similar News