பானாவரத்தில் 60ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து முதியவர் காயம்
பானாவரத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 60 ஆண்டுகள் பழமையான மரம் விழுந்து முதியவர் காயம்;
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பானாவரத்தில் நேற்று மாலை பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் சுமார்1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது அதன்காரணமாக மின் மாற்றிகள் பழுதடைந்து மின்தடை ஏற்பட்டதால் பானாவரம், அதைச் சுற்றியுள்ளப் பகுதிகள் இரவு முழுவதுமாக இருளில் மூழ்கியது..
அந்நேரமாக பானாவரத்தைச் சேர்ந்த முதியவர் ராஜேந்திரன்(65) என்பவர் காவேரிப்பாக்கம் சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் . அப்போது மழை ஈரம் காரணமாக சாலையோரமாக இருந்த 60ஆண்டுகள் பழமையான இலுப்பை மரம் வேருடன் சாய்ந்து சாலையில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது விழுந்தது .
அதில் மரக் கிளைகளுக்கிடையில் சிக்கி காயமடைந்த முதியவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் .
மரம் விழுந்த தகவல் கேட்டு அங்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றினர். மேலும் மரம் விழுந்த காரணத்தால் சோளிங்கர் -காவேரிப்பாக்கம் நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கும் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. அதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.