சிமெண்ட் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி சோளிங்கரில் சாலை மறியல்

சேதமடைந்த சிமெண்ட் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி சோளிங்கர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2021-08-24 14:07 GMT

சோளிங்கர் பேருந்து நிலைய பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் பின்புறத்தில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன அவர்கள் தினமும் பயன்படுத்தும் சிமெண்ட் சாலை வெகுநாட்களாகவே சேதமடைந்து குண்டும் குழியுமாய் உள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர், அதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் சீரான சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆயினும் இதுவரை சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபடாததை அடுத்து அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்து சோளிங்கர் பேருந்து நிலையத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சோளிங்கர் காவல் துணை   ஆய்வாளர் அருண்குமார் மற்றும் பேரூராட்சி தூய்மை ஆய்வாளர் வடிவேல் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குத்தகைதாரர் உடனடியாக வரவழைக்கப்பட்டு பணிகளை துவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்புக்கு உள்ளாகியது.

Tags:    

Similar News