மழை வெள்ளத்தில் சரிந்து போன சாலைப்பகுதியில் அமைச்சர் ஆய்வு

சோளிங்கர் அடுத்த ஆயிலம் பகுதியில் மழை வெள்ளத்தால் சரிந்துபோன சாலையை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

Update: 2021-11-30 13:56 GMT

காவேரிப்பாக்கம் அருகே மண் சரிவு ஏற்பட்ட சாலையை ஆய்வு செய்த அமைச்சர் காந்தி 

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருந்து, காவேரிப்பாக்கம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை ஆயிலம் என்ற கிராமப்பகுதியில் பெய்த மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலை சுமார் 100அடி நீளத்திற்கு சரிந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது.

இதனால் , அப்பகுதி வழியாக சோளிங்கர்  காவேரிப்பாக்கம் மற்றும் வழி கிராமங்களுக்குச் செல்லும்  மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் மற்றும் அதிகாரிகள்  சரிந்து போன சாலைப்பகுதியினை ஆய்வு செய்தனர்

மேலும்,  அமைச்சர் சரிந்துபோன சாலையை சரிசெய்திடவும், தடுப்புப்பணிகள் மற்றும் சாலை சீரமைப்பு வேலைகளைத் தொடங்கிட   நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் மற்றும் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News