சோளிங்கரில் பைக்கில் சென்றவர்களிடம் பணத்தை பறித்து பைக்கை பிடுங்கிச் சென்றவர்கள் கைது
சோளிங்கர் போடப்பாறை அம்பேத்கர் சிலையருகே பைக்கில் சென்றவர்களிடம் பணம் மற்றும் பைக்கை பிடுங்கிச் சென்ற 2 பேர்கைது.
ராணிப்பேட்டையை சேர்ந்த புருஷோத்தமன் மகன் பிரகாஷ் (26) அவரது அண்ணன் மதிலேஷ் (40) இருவரும் ராணிப்பேட்டையில் இருந்து பைக்கில் தணிகை போலூரில் உள்ள அவர்கள் மாமா வீட்டிற்கு,சோளிங்கர்- அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் போடப்பாறை அம்பேத்கர் சிலை அருகே மர்ம நபர்கள் பைக்கை வழிமறித்து நிறுத்தி பிரகாஷ்,மதிலேஷ் இருவரிடமிருந்து கத்தியை காட்டி மிரட்டி 15ஆயிரம்,மதிலேஷ் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயின் மற்றும் அவர்களது பைக்கையும் பறித்துக் கொண்டு அந்த பைக்கிலேயே மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இது குறித்து பிரகாஷ் சோளிங்கர் போலீசில்புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் மற்றும் போலீசார் பாணாவரம் கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2வாலிபர்கள் மின்னல் வேகமாக பைக்கில் அங்கு வந்தனர் .இருவரை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் ஓட்டிவந்த பைக்கின் ஆவணம் வழங்காமல் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்தனர்
இதையடுத்து வாலிபர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் வாலிபர்கள் 2பேரும் சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூர் காலனியை சேர்ந்த சிவிசக்ரவர்த்தி மகன் அசோக்(21) மற்றும் சோளிங்கர் மாருதி நகரை சேர்ந்த பாபு மகன் மணிகண்டன் (எ)பாட்டில் மணி என்று தெரிய வந்தது .
மேலும் அவர்கள் இருவரும் போடப்பாறை அம்பேத்கர் சிலை அருகே பைக்கில் வந்த பிரகாஷ் மற்றும் மதிலேஷ் ஆகியோரை வழி மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம்,செயின்,மற்றும் பைக்கை பறித்து அதே பைக்கில் தப்பி சென்றதை ஒப்புக் கொண்டனர்.
இதனை அடுத்து அசோக், மணிகண்டன் இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து பணம்,கவரிங் செயின் மற்றும் பைக் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர்.