பாணாவரம் கொலையில் குற்றவாளிகள் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
பாணாவரத்தில் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் பகுதி இரங்காபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச்சேர்ந்த வரதராஜ் (65), ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் கடந்த மே மாதம் 7ந்தேதி இரவு அவருடைய நிலத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் .
தகவலறிந்த பாணாவரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்பு, தடயங்களை சேகரித்து வழக்குப்திந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் ,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிஅடுத்த பட்டாபிராம்புரத்தைச் சேர்ந்த பார்த்திபன்(32) கடந்த மாதம் 3ந்தேதி சென்னைஆலந்தூர் நீதிமன்றத்தில் சரண்டைந்துநீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டான். இதனையறிந்த, பாணாவரம் போலீஸார் பார்த்திபனை காவலில் எடுத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். அதில் அவன் அளித்த வாக்குமூலத்தின் பேரில் ரங்காபும் பஜனைக்கோயில் தெரு குமார் மற்றும் திருத்தணியைச் சேர்ந்த லட்சுமணன்ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் ,அவர்கள் இருவரும் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவ்வழக்கு தொடர்பாக, போலீஸார், பார்த்திபன், குமார் ,மற்றும் லட்சுமணன். ஆகியோரிடம் விசாரணை செய்து சிறையிலடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இராணிப்பேட்டை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா, குற்றவாளிகளான பார்த்திபன், குமார், மற்றும் லட்சுமணன் 3பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், குண்டர்தடுப்பு சட்டத்தின் கீழ் பார்த்திபன், குமார் இருவரையும் சிறையலடைக்க உத்தரவிட்டார்.