அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
அரக்கோணம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களைக் கைது செய்தப் போலீஸார் 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டவுன் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதிய பேருந்து நிலையத்தின் கடைசியாக உள்ள மறைவான இடத்தில், போலீஸார் சந்தேகிக்கும் வகையில் 2, வாலிபர்கள் சுற்றித் திரிந்தனர்.
உடனே,,போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் , அரக்கோணம் சுவால்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார்(26), மேட்டுக்குன்னத்தூர் சக்திவேல்(22) என்பதும் இருவரும் கஞ்சாவைக் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து சிறு சிறு பொட்டலங்களில் மடித்து சில்லரை விற்பனை செய்து வருவது தெரியவந்தது .
இதனையடுத்து அரக்கோணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ,தினேஷ்குமார், சக்திவேல்ஆகிய இருவரையும் கைது செய்து பதுக்கிவைத்திருந்த 1 கிலோ,100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.