முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி கொலை: மூவர்கைது

அரக்கோணம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை பாறாங்கல் போட்டு கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-30 02:55 GMT

கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கைதானவர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அவினாசி கண்டிகை சார்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்(32) கூலி வேலை செய்து வருபவர். கடந்த சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால்,அவரை ப இடங்களில் தேடிவந்த உறவினர்கள் அங்குள்ள பச்சையம்மன் கோயில் அம்மன் வளாகத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு, அருண் மது போதையில் கீழே விழுந்து இறந்ததாக்க் கருதி உடல் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் ,அருண் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தந்தை கோவிந்தராஜ் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிந்த போலீஸார் , அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் , வட்டாட்சியர் பழனிராஜன் ஆகியோர் முன்னிலையில் அருணின் சடலத்தை தோன்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு  வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறாய்வு அறிக்கையில்  அருண் தாக்கப்பட்டு ஏற்பட்டு இறந்தாக பிரேதபரிசோதனை் அறிக்கையில் தெரியவந்தது. இதற்கிடையில் போலீஸார், அருணுடன் கடைசியாக இருந்த அரக்கோணம் அடுத்த மோசூரைச்சேர்ந்த சந்தோஷ் (22) ராமாபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி (39). அவிநாசி கண்டியை சேர்ந்த தரணி (35). ஆகியோரை பிடித்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் மூவரும் சம்பவ தினத்தன்று, அவினாசி கண்டிகை பகுதியில் உள்ள நீர்நிலையில்  மீன் பிடிப்பதற்காக வலை போட்டு விட்டு மூவரும் காத்திருந்ததாகவும் அப்போது அங்கு வந்த அருணுக்கும் சந்தோஷிற்கும் ஏற்கனவே இருந்துள்ள குடும்ப பகையால் தகராறு ஏற்பட்டதில் . ஆத்திரமடைந்த அடைந்த சந்தோஷ் , நண்பர்களுடன் சேர்ந்து பாறாங்கல்லை எடுத்து அருணின் மார்பு மீது போட்டதாகவும்  தெரிவித்தனர். அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கவே, உடனே அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீஸார், சந்தோஷ், மாயண்டி, தரணி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News