அரக்கோணம் அருகே நகைக்காக மூதாட்டி கொலையா?:போலீஸார் விசாரணை.
அரக்கோணம் அடுத்த அம்பரிஷிபுரத்தைச்சேர்ந்த மூதாட்டியை நகைக்காக கொலை செய்தார்களா? கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்;
கொலை செய்யப்பட்ட சரோஜா அம்மாள்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்பரிஷிபுரம் பகுதி சேர்ந்த சரோஜா அம்மாள் வயது 72 அவருக்கு சொந்தமான இரண்டு மாடுகளை அருகே உள்ள வயல்வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர்,
மூதாட்டியின் அருகே இருந்த துணியை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மூதாட்டி காதில் மற்றும் மூக்கில் இருந்த மூக்குத்தியை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று இருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் இப்பகுதியில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் ஈடுபட்டு வருவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த நகர காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ,கிராம மக்கள் இங்கு வழிப்பறி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.