29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்: இராணிப்பேட்டை கலெக்டர்

அரக்கோணம் அருகே 29 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2021-07-29 05:45 GMT

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டி கோரிக்கை வைத்தனர் .

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் நடப்பு கொள்முதல் (KMS20-21) பருவத்தில் அரக்கோணத்தை ஒட்டியுள்ள 29 இடங்களில் 29/7/2021(இன்று) முதல் 10 /8/2021 வரை மேலபுலம்புதூர், பணப்பாக்கம், ரெட்டிவலம், ஜாகீர் தண்டலம், நெல்வாய், திருமால்பூர், நெமிலி, மகேந்திரவாடி, உளியநல்லூர், கீழ்களத்தூர், பெரும்புலிபாக்கம்,அரசநெல்லிக்குப்பம், புதுகண்டிகை,  (சயனபுரம்) இலுப்பைதண்டலம் கணபதிபுரம், சேந்தமங்கலம், (பின்னாவரம்) சித்தேரி சம்பத்துராயன்பேட்டை, சிறுனமல்லி, கடம்பநல்லூர், (மாங்காட்டுச்சேரி), தச்சம்பட்டரை, ஆலப்பாக்கம், தருமநீதி, சிருகரூம்பூர்,மாமன்டூர்,மங்கலம் புதூர், காவேரிப்பாக்கம், வேடந்தாங்கல், தக்கோலம் ஆகிய கிராமங்களில் நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் செயல்படும் என அறிவித்துள்ளார்

மேலும் விவசாயிகள் நிலத்தின் பட்டா,சிட்டா,கிராம நிர்வாக அலுவலரின் சான்று மற்றும் பிற பதிவு ஆவணங்களுடன் தங்களது பெயரினை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்யவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கக்கூடாது. விவசாயிகள் பதிவு செய்தபின், முன்னுரிமையின் படி தங்களுக்கான முறைவரும்போது கைப்பேசி வாயிலாக தெரிவிக்கப்படும்

அப்போது ,விவசாயிகள் நிலத்தின் ஆவணங்களுடன் அறுவடைசெய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் 9894803270 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News