இராமநாதபுரம்: 12 மணி நேரத்தில் 18 லட்சம் பனை மர விதைகளை நடவு
இராமநாதபுரத்தை அடுத்த கழுகூரணி கிராமத்தில் கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் மரம் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார்
இராமநாதபுரத்தில் 12 மணி நேரத்தில் 18 லட்சம் பனை மர விதைகளை நடும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
தமிழகத்தில் பனை மரங்கள் நிறைந்த மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. ஆனால் அண்மைகாலமாக பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் பனை மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் உலக சாதனை நிகழ்வாக 12 மணி நேரத்தில் 18 லட்சம் பனை மர விதைகளை நடும் நிகழ்வு இன்று துவக்கி வைக்கப்பட்டது. இராமநாதபுரத்தை அடுத்த கழுகூரணி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் இந்த நிகழ்வினை துவக்கி வைத்தார். உலக சாதனை உயர் பார்வையாளர் அமித் சிங் கொரானி பங்கேற்றார். இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 429 பஞ்சாயத்துகளிலும் ஒரேநேரத்தில் பனை மர விதைகள் நடும் பணி நடைபெற்றது.