திருவாடானை அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

தேளூர் ஊராட்சியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-10-18 11:06 GMT

தேளூர் ஊராட்சியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தேளூர் ஊராட்சியில் பல ஆண்டுகளாக குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், கிராமத்தில் குடிநீர் கிடைக்காததால் விலைக்கு வாங்கி குடித்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழங்குளம் கவுன்சிலர் லூர்துமேரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் சரிசெய்வதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News