தொண்டியில் மர்ம பாெருட்கள் அடங்கிய புதையல்: ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
தொண்டி வட்டாணம் சாலை அருகில் வீடு கட்டுவதற்காக பில்லர் குழிகள் தோண்டிய போது ஒரு சிறிய பழைய சாக்கு பை கிடைத்துள்ளது.
தொண்டியில் கிடைத்த புதையலால் பரபரப்பு. காவல்துறையினர் விசாரணை.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி வட்டாணம் சாலை அருகில் ஏற்கனவே டவர் இருந்த இடத்தில் சக்கரவர்த்தி என்பவர் இடம் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக பில்லர் குழிகள் 6 அடி ஆழத்தில் தோண்டிய போது ஒரு சிறிய பழைய சாக்கு பை இருந்துள்ளது. சிறிய அளவில் இருந்த சாக்குப் பையை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் வெள்ளை நிறத்தில் பளபளக்கும் பொருட்களை பார்த்து அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் நிலத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். தகவலறிந்த தொண்டி காவல்துறையினர் சம்பவ இடம் சென்று விசாரித்து அந்த பொருளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். வெள்ளை நிறத்தில் பாசி உருண்டை அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திருவாடானை தாசில்தாரிடம் கேட்டபோது காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக காவல் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.