திருவாடானை மேம்பாடு: அமமுக வேட்பாளர் வாக்குறுதி

திருவாடானை தொகுதி அமமுக வேட்பாளர் ஆனந்த் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.

Update: 2021-03-23 05:02 GMT

தமிழக சட்டபேரவை தேர்தலில் திருவாடானை தொகுதி அமமுக வேட்பாளர் ஆனந்த் அஞ்சுகோட்டை, அச்சங்குடி, காரங்காடு, திருவெற்றியூர், புதுப்பட்டிணம், சப்பை, தினையத்தூர், தேளுர், பழையங்கோட்டை உள்ளிட்ட 57 கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு கிராமங்களில் பட்டாசுகள் வெடித்து பெண்கள் ஆராத்தி எடுத்தும், மாலை மற்றும் பொன்னாடை போத்தியும் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, திருவாடானை தொகுதி என்பது விவசாயத்தையும், மீனவர்களையும் நம்பி இருக்கும் தொகுதி. ஆண்டுதோறும் மழை பொய்த்து வருவதால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு இன்சூரன்ஸ் பெற்றுக் கொடுக்க தனியார் நிறுவனத்தில் இருக்கும் இன்சூரன்ஸை பொதுத்துறை வங்கிக்கு மாற்றி இராமநாதபுரத்தில் அதற்கான வங்கி கிளையை அமைத்து இன்சூரன்ஸ் விவசாயிகளுக்கு எளிதாக கிடைக்க முயற்சி எடுப்பதாக தெரிவித்தார். மேலும் முதன்முதலில் இந்திய சுதந்திரப் போர் கொடியை தூக்கியது திருவாடனையாகும். ஆனால் அது மிகப்பெரிய சட்டமன்ற தொகுதியாக இருந்தாலும் இன்னும் திருவாடனை ஊராட்சி ஆகவே உள்ளது. எனவே திருவாடனை பேரூராட்சியாக தரம் உயர்த்தவும், கிராமங்கள்தோறும் முறையான சாலை வசதி மேம்பாடு செய்யவும் முயற்சி எடுப்பதாக கூறிய அவர், வீணாகும் காவேரி நீரை குண்டாற்றுடன் இணைத்து அதனை இப்பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீரை நிரப்பி இப்பகுதி விவசாயத்திற்கு தேவையான பயன்பாட்டிற்கு கொண்டுவந்து சேர்ப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

Tags:    

Similar News