இராமநாதபுரம் நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 3 பேர் இன்று வேட்புமனு
இராமநாதபுரம் நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இராமநாதபுரம் நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. இந்நிலையில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இராமநாதபுரம் நகராட்சியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமையில் 2 வது வார்டில் போட்டியிடும் ஜோதிமணி முத்துராமலிங்கம், 5 வது வார்டில் போட்டியிடும் கோபால் என்ற ராஜாராம் பாண்டியன், 20 வது வார்டில் போட்டியிடும் கோபி ஆகிய 3 வேட்பாளர்களும் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.