தொண்டி அருகே பழைய திரையரங்கில் திடீர் தீ விபத்து
தொண்டி அருகே பழைய திரையரங்கில் திடீர் தீ விபத்து. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.;
இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை படையாச்சி தெருவை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான திரையரங்கு தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. 2007 ம் ஆண்டு முதல் திரையரங்கு செயல்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் சுற்றுவட்டார விளையாட்டு வீரர்கள் பேட்மிட்டன் உள்விளையாட்டு அரங்கமாக பயன்படுத்தி வந்தனர். கட்டிடம் பழுதின் காரணமாக வீரர்கள் அங்கு செல்ல வில்லை. இந்நிலையில் சுற்றியுள்ள முட்களை வெட்டி குவித்து தீ வைத்துள்ளனர்.
காற்று வேகமாக வீசியதால் தீ திரையரங்கின் கட்டிடத்தின் மேற்புறம் போடப்பட்டுள்ள ஒலை கிடுகில் விழுந்து தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த திருவாடானை தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.