காவலர் குடியிருப்பில் வாகனங்களின் பொருட்கள் திருட்டு: இளைஞர் கைது
தொண்டி காவலர் குடியிருப்பில் இருந்த வாகனங்களின் பொருட்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை காவல் நிலைய வளாகத்திலும் காவலர் குடியிருப்பு அருகிலும் போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த வாகனங்களில் உள்ள பேட்டரி, ரேடியோ செட், ஜாக்கி, லிவர் ஆகிய பொருட்களை கொடிப்பங்கு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் கவிராஜ் (22) திருடி சாக்குப்பையில் எடுத்துச் சென்றபோது போலீஸார் வாலிபரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் தொடர்ந்து காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பொருள்களை திருடி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து வாலிபர் கவிராஜ் மீது தொண்டி போலீஸார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.