இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகள் பறிமுதல்

இராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.;

Update: 2021-10-25 05:29 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்.

சென்னையில் உள்ள வனத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகள் தேவிப்பட்டினம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் தேவிப்பட்டினம் பெரியகடை கடற்கரை பகுதியில் உள்ள ஒரு குடோனில் கடல் அட்டைகளை பதப்படுத்தி பேக்கிங் செய்யும் பணி நடந்து வந்தது. வனத்துறையினர் சுற்றி வளைத்த போது, அங்கிருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி பிடித்ததில் சித்திக் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய இருவரும் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் பலப்படுத்துவதற்கான தளவாட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட இருவரும் கைது செய்யப்பட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட கடல் அட்டைகள் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News