மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாய்மர படகுப்போட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க மாவட்ட மீனவரணி சார்பில் பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது.

Update: 2021-10-17 12:33 GMT

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாய்மர படகு போட்டி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தொண்டி புதுக்குடியில் பா.ஜ.க மாவட்ட மீனவரணி சார்பில் பாய்மரப் படகுப் போட்டி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில், மாநில மீனவர் பிரிவு தலைவர் மரு.சதிஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
போட்டிக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், தேசிய கயிறு வாரியத் தலைவர் குப்புராமு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
போட்டியில் புதுப்பட்டிணம் கவியின் படகு முதலிடத்தையும், தொண்டி இளஞ்சியம் படகு இரண்டாம் இடத்தையும், தொண்டி தர்மராசு படகு மூன்றாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற படகு உரிமையாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
பாதுகாப்பு பணியில் தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் கடலோர காவல் துறையினர் ரோந்து படகில் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News