ஆர்.எஸ். மங்கலம் அருகே கத்தியைக்காட்டி டாஸ்மாக்கில் கொள்ளை

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே கத்தியைக்காட்டி டாஸ்மாக்கில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-04-07 04:42 GMT
ஆர்.எஸ். மங்கலம் அருகே கத்தியைக்காட்டி டாஸ்மாக்கில் கொள்ளை

ஆனந்தூர் அரசு மதுபானக்கடை .

  • whatsapp icon

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, ஆர் எஸ் மங்கலம் அருகே ஆனந்தூரில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையில் விற்பனை நேரத்தில் மர்ம நபர்கள் முகமூடி அணிந்து வந்து விற்பனையாளரிடம் கத்தியை காண்பித்து விற்பனை செய்து வைத்திருந்த பணம் 2 லட்சத்து 6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து விற்பனையாளர் திலீப்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.மங்களம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News