தேங்கி நிற்கும் கழிவுகளால் கொரோனா பரவும் அபாயம்

தொண்டியில் தேங்கி நிற்கும் கழிவுகளால் கொரோனா பரவும் அபாயம்.

Update: 2021-04-12 11:45 GMT

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி மாவட்டத்தில் மிகப்பெரிய பேரூராட்சியாகும். இங்கு மீன்பிடித்தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்தும், பிளாஸ்டிக் பாட்டில்கள் நெகிழி பைகள் ஆகியவை தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

இதனை சரி செய்திட பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்பொழுது இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இதுபோன்று கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்பதால் பல்வேறு தொற்று நோய் பரவி வருகிறது. இதனால் அடிக்கடி குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு காய்ச்சல் போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சுகாதாரத்துடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News