இராமநாதபுரத்தில் திருடுபோன ரூ. 7 லட்சம் செல்போன்கள் கண்டுபிடிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில், திருடுபோன ரூ. 7 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2021-09-29 12:30 GMT

திருடு போன ரூ7 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை, உரியவர்களிடம் இராமநாதபுரம் எஸ்பி ஒப்படைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில்,  பொதுமக்களிடம் திருடுபோன 311 செல்போன்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவற்றை கண்டுபிடிப்பதற்காக,  மாவட்ட எஸ்பி கார்த்திக் தனிப்படை ஒன்றை அமைத்திருந்தார். தனிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி, 110 விலை உயர்ந்த செல்போன்களை கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட 110 செல்போன்களும்,  இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,  உரியவர்களிடம் மாவட்ட எஸ்பி கார்த்திக் ஒப்படைத்தார். ஒப்படைக்கப்பட்ட செல்போன்கள், ரூ 7 லட்சம் மதிப்பு உடையது என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி கார்த்திக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், செல்போன் விற்பனை நிலையங்களில் பழைய செல்போன்களை விலைக்கு வாங்கும்போது,  அந்த செல்போன்கள் அவர்களுடையதானா என்பதை அறிந்து அவர்களது ஆதார் எண் பெற்றுக்கொண்டு பழைய செல்போன்களை வாங்கவோ விற்கவோ செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News