இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை தப்பியோட்டம்

இராமநாதபுரம் அருகே யூடியூப் பார்த்து வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மகன் கைது. தந்தை தப்பி ஓட்டம்.

Update: 2021-06-11 12:24 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 5 பேர் சாராயம் காய்ச்சியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் அதற்கான பொருட்கள், குக்கர் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பின்னரும் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து  கேணிக்கரை போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பவுனு என்பவரின் மகன் மகாராஜா(65) என்பவர் தனது மகன் சக்தி(21) என்பவருடன் சேர்ந்து குக்கரில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.போலீசாரை கண்டதும் மகாராஜா தப்பி ஓடிவிட்டார்.

சக்தியை மடக்கி பிடித்த போலீசார் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் மற்றும் சாராய ஊரல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அவரின் தந்தை மகாராஜாவை போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபரத்தில் கடந்த சில தினங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்து வரும்நிலையில் உயிர்பலி ஏற்படும் முன்னர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News