இராமநாதபுரம் மீனவர் குவைத் கடலில் மூழ்கி உயிரிழப்பு
இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணம் மீனவர் கண்ணுச்சாமி குவைத்தில் கடலில் மூழ்கி பலியானார்.;
இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணம் மீனவர் கண்ணுச்சாமி குவைத்தில் கடலில் மூழ்கி பலியானார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பாசிப்பட்டிணம் மீனவர் கண்ணுச்சாமி 43, குவைத்தில் கடலில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். கண்ணுச்சாமி இரு ஆண்டுகளுக்கு முன் குவைத் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றார். ஏப். 2 மீன் பிடிப்படகில் சென்ற போது கேப்டனின் அலைபேசி கடலில் தவறி விழுந்தது. அதை எடுக்க கண்ணுச்சாமி கடலில் குதித்தார். இரண்டு முறை கீழே போய் தேடி விட்டு மேலே வந்தார். மூன்றாவது முறையாக கடலில் மூழ்கியவர் பலியானார். நேற்று அவரது உடல் மீட்கப்பட்டது. கண்ணுச்சாமிக்கு மனைவி வனிதா 31, மகன் கஜேந்திரன் 13, மகள்கள் கீதா 11, பிரீத்தா 9, உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.