தொண்டியில் கடல்பாசி விதைகள் வழங்கினார் இராமநாதபுரம் ஆட்சியர்
இராமநாதபுரம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தொண்டியில் கடல்பாசி விதைகள் வழங்கினார்.;
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பி.வி.பட்டிணம் மீனவர்கள் மற்றும் மகளிர் குழுவினர் கடலில் கடற்பாசி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை ஊக்கமளிக்கும் வகையில் கடற்பாசி விதைகளை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் கலந்து கொண்டு ஏராளமான பயனாளிகளுக்கு கடற்பாசி விதைகளை வழங்கினார்.
மேலும் கடற்பாசி சரியாக வளர்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் கடற்கரைக்கு நேரில் சென்று பார்வையிட்டு பயனாளிகளிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் திருவாடானை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் மற்றும் மீன்வளதுறை கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.