திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு
திருவாடானை அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.;
திருவாடானை அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே பலியானது.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த அஞ்சுகோட்டை கிராமச் சாலையில் காட்டுப்பகுதியில் இருந்து சாலையை கடக்க முயன்ற இரண்டு வயது ஆண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பலியான மானை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.