இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-02-07 11:14 GMT
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தேவேந்திரர் நகர் கிராம மக்கள்.

  • whatsapp icon

இராமநாதபுரம் மாவட்டம், எமனேஸ்வரம் அடுத்த தேவேந்திரர் நகர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு சாலை வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

பலமுறை ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்து இன்று அடுப்பு, அரிசி, பருப்பு உள்ளிட்ட தட்டுமுட்டுச் சாமான்களுடன் கிராம மக்கள் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கேயே அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்ததால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அடிப்படை வசதிகளை செய்து தராததால் கிராம மக்கள் தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய சம்பவம் இராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News