வருமுன் காப்போம் மருத்துவமுகாமில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த மக்கள்
ஆர்.எஸ் மங்கலத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் சுமார் 5 மணி நேரம் மக்கள் காத்திருந்தனர்;
ஆர்.எஸ் மங்கலத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்த மக்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவம் முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் காலை 7 மணிக்கு தொடங்கியது. முகாம் தொடங்கிய உடனே மருத்துவம் பார்க்கப்படும் எனது தகவலை அடுத்து ஆர்.எஸ் .மங்கலம், புள்ளமடை, செங்குடி, சோளந்தூர், சனவெலி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலை 7 மணி முதல் மருத்துவம் பார்க்க டோக்கன் பெறுவதற்காக காத்திருந்தனர்.
ஆனால் முகாம் துவக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் துவக்க விழா நிகழ்சிகள் ஆகியவற்றில் மட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்தியதாகவும் மருத்துவம் பார்க்க டோக்கன் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மருத்துவம் பார்க்க வந்த கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து காத்திருந்து வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் அரசு மக்களை ஏமாற்றி அலைகக்களித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.