இராமநாதபுரம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை- பணம், நகை கொள்ளை

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு பணம், நகைகொள்ளையடிக்கப்பட்டது.;

Update: 2022-02-24 03:54 GMT

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கீழ்பனையூர் அருகே உள்ள ஆயிரவேலி கிராமத்தைச் சேர்ந்த ஜெயமங்கலம் மனைவி பூங்கோதை (வயது 65 )வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த மர்ம நபர்கள் மூதாட்டி பூங்கோதையை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் திருவாடானை போலீஸார் அங்கு விசாரனை செய்து வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரனை நடத்தி வருகிறார். மேலும் தடயவியல் நிபுனர்களும், மோப்ப நாய் ஜுலி வரவழைக்கப்பட்டு சோதனைச் செய்தனர். பட்டப்பகலில் மூதாட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News