தொண்டி பழைய காவலர் குடியிருப்புக்குள் அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு
தொண்டி பழைய காவலர் குடியிருப்புகட்டித்திற்குள் 65 மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு.
தொண்டி பழைய காவலர் குடியிருப்பு கட்டித்திற்குள் 65 மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பழைய காவல் நிலையம் பின்புறம் இருக்கும் காவலர் குடியிருப்பு கட்டிடத்திற்குள் உடல் அழுகிய நிலையில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தொண்டி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் தொண்டி அருகே உள்ள அரியப்புவயல் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ஆரோக்கிய அருளானந்து (65) என்பது தெரியவந்தது. இதையடுத்து அழுகிய உடலை சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.
இது கொலையா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 2ஆம் தேதி முதல் தனது தந்தை காணவில்லை என அவரது மகன் சேகர் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.