தனி ரேஷன் கார்டு, தனி வீடு வழங்க மண்டபம் முகாம் அகதிகள் கோரிக்கை
மண்டபம் அகதிகள் முகாமில் தனி ரேஷன் கார்டு தனி வீடு வழங்கக்கோரி இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.;
மண்டபம் அகதிகள் முகாம், இலங்கை அகதிகள் தனி ரேஷன் கார்டு தனி வீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர்.
இராமேஸ்வரம், மண்டபம் அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கான தனித்தனி வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இலங்கையிலிருந்து வரும் அகதிகள் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனி ரேஷன் கார்டுகள், சலுகை விலையில் ரேஷன் பொருட்கள் இலவச தங்குமிடம் போன்றவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து இங்கு தங்கியுள்ள ரஞ்சனி சசிகலா தேவி ஆகியோர் தாங்கள் பல ஆண்டுகளாக மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருவதாகவும், தங்கள் தாயார் குடும்பத்தோடு சேர்த்து ஒரே ரேஷன் கார்டு மற்றும் ஒரே வீட்டில் இருப்பதாகவும், தங்களுக்கு தனி ரேஷன் கார்டு மற்றும் தனிவீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதனை ஒரு மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.