கமலஹாசனின் சொந்த மாவட்டத்தில் காரை கயிறு கட்டி இழுத்து போராட்டம்.
கமலஹாசனின் சொந்த மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காரை கயிறு கட்டி இழுத்து போராட்டம்.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. விலை உயர்வைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் பலதரப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சின் தலைவர் கமலஹாசனின் சொந்த மாவட்டமான இராமநாதபுரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர் செயலாளர் ப்ரைட் மாரிமுத்து தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், தேவராஜன் முன்னிலை வகித்தனர். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரை கயிறு கட்டி இழுத்தும், பெண்கள் விறகு அடுப்புடன் வந்தும் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக எரிபொருள்களின் விலையை குறைக்கவில்லை என்றால் மக்கள் நீதி மய்யம் சார்பில் மிகப் பெரிய தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் காலந்து கொண்டனர்.