செய்தி எதிரொலி: குடிநீர் வழங்கும் இடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு
இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி. குடிநீர் வழங்கும் இடத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு.
இராமநாதபுரம் ஓன்றியம் பாண்டமங்கலம் ஊராட்சி சிறுகுடி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் கடந்த 5 வருடங்களாக வரவில்லை. சுமார் 3 கி.மி., தொலைவில் உள்ள ஊரணியில் தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இந்த மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் நாரணமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்தன் நாரணமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாங்குளம் கிராமத்தில் இருந்து தினசரி 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கி வருவதால் தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து ஊராட்சி மன்றத்தலைவர் என்று இன்ஸ்டாநியூஸ் தளத்தில் செய்தி வெளியானது.
இந்நிலையில் அதன் எதிரொலியாக இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று குடிநீர் வழங்குவதை ஆய்வு செய்தார். மேலும் மாற்று ஊராட்சிக்கு மனிதாபத்தோடு தண்ணீர் வழங்கும் நாராணமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்தனை பாராட்டினார். மேலும் சிறுகுடி கிராமத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகப்பெருமாள் சிறுகுடி கிராமத்திற்கு நிரந்தரமாக காவேரி தண்ணீர்; கிடைக்க காவேரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது பொதுமக்கள் சாலை வசதி, பாலம், 100 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார். இந்நிலையில் தங்களின் தண்ணீர் தாகத்தை செய்தியின் மூலம் தீர்த்து வைத்த இன்ஸ்டாநியூஸ் க்கு சிறுகுடி மக்கள் நன்றி தெரிவித்தனர்.