தொண்டி அருகே கபடி போட்டியில் இரு பிரிவினர் இடையே கடும் மோதல்
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கபடி போட்டியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர்.;
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுக்கோட்டையில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் போது முன்விரோதம் காரணமாக இரு பெண்கள் உட்பட 6 பேருக்கு சராமாரி அரிவாள் வெட்டு ஏற்பட்டது. திடீரென்று ஒருவருக்கொருவர் கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து, சக்திவேல், சகாதேவன், கலைச்செல்வி, மணிகண்டன், கமலேஷ் உள்பட 6 பேரும் தொண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுக்கோட்டையில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த திருவாடனை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.