தொண்டியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் அரசு நூலக கட்டிடம்
தொண்டியில் இடிந்து விழும் நிலையில் அரசு நூலக கட்டிடம். புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை.
தொண்டியில் இடிந்து விழும் நிலையில் அரசு நூலக கட்டிடம். புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி சத்திரம் தெருவில் உள்ள அரசு நூலகம் பல்வேறு வரலாற்று புத்தகங்களைக் கொண்ட நூலகமாகும். ஆனால் தற்போது அந்த நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது. இதனால் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேலும் கட்டிடம் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்வதற்கு முன் சேதமான அரசு நூலக கட்டிடத்தை அகற்றி புதிய நூலக கட்டிடத்தை கட்ட மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புத்தக வாசிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.