கடலில் தத்தளித்த மீனவர்கள் 4 பேரை மீட்ட சக மீனவர்கள்

கடலில் தத்தளித்த நம்புதாளை மீனவர்கள் 4 பேரை மீட்க கடலோர காவல் படை வராததால் சக மீனவர்களே பத்திரமாக மீட்டனர்.

Update: 2021-09-12 18:43 GMT

இராமநாதபுரம் அருகே நம்புதாளை கடற்கரை

கடலில் தத்தளித்த நம்புதாளை மீனவர்கள் 4 பேரை  சக மீனவர்களே பத்திரமாக மீட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவ கிராமத்திலிருந்து நேற்று நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்lது. இதனால் அவர்கள் தத்தளித்து உயிருக்குப் போராடி வந்தனர். அவர்களிடமிருந்த செல்போன் மூலமாக கரையில் இருந்த மீனவர்களுக்கு தொடர்பு கொண்டு, தங்களின் நிலை குறித்து தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து கடலோர காவல்படை குழுமத்தினரின் உதவியை மீனவர்கள் நாடினர். மாலை 6 மணிக்கு மேல் தங்களால் பணி செய்ய இயலாது என பொறுப்பற்ற முறையில் கூறி அவர்கள் வர மறுத்ததாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கரையில் இருந்த படகை எடுத்து சென்ற சக மீனவர்கள், தத்தளித்து உயிருக்கு போராடிய 4 மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் இது போன்ற ஆபத்து காலங்களில் கடலோர காவல்படை குழுமத்தினர் உதவிக்கு வராமல் அலட்சியமாக பேசுவதால், மீனவர்களின் உயிர் மதிக்கப்படுவதில்லை என நம்புதாளை மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு கடலோர காவல்படை குழுமத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையோடு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News