பெண் காவலர் படுகொலை சம்பவம்: இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண் காவலர் சபியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.;

Update: 2021-09-10 13:05 GMT

இராமநாதபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண் காவலர் சபியா படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் நகர் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் தலைநகர் டெல்லியில் பெண் காவலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு மாவட்டம் தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் சபியா என்கிற பெண் காவலர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயூப்கான் அவர்கள் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் ஆர்.ஆரிப்கான், மாவட்ட துணைத்தலைவர் முகமது பஷீர், மாவட்ட துணைச் செயலாளர்கள் மன்சூர், தஸ்தஹீர் ஜியாவுல் ஹக், சுல்தான், யாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் குழந்தைகள் கலந்து கொண்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் கரீம் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியபோது, தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையில் பணியாற்றிய பெண் காவலருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற துறைகளில் அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான பெண், மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் காவலரின் உடல் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு கண்டன உரை ஆற்றினார்.

Tags:    

Similar News