இராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.;
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.
இராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்சியர் சங்கர் லால் குமாவத், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். வாகனங்களின் தரம் மற்றும் இருக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
மேலும் வாகன ஓட்டுனர்களிடம் சரியான முறையில் வாகனங்களை கையாள வேண்டும் என்றும், சிறிய வேலை என்றாலும் உடனே பார்த்து வாகனத்தை சரி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆட்சியருடன் போக்குவரத்து துறை அலுவலர் சேக் முகமது மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.