திருவாடானை நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி நேரில் ஆய்வு
திருவாடானை நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சன்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவாடானை நீதிமன்றத்தில் வருடாந்திர பணி தொடர்பாக நீதிமன்ற பொருட்கள் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் ஆகியவற்றை மாவட்ட முதன்மை நீதிபதி சன்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மாவட்ட உரிமையியல் உடன் இணைந்து நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்நீதிமன்றம் ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது நீதிமன்றத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி செயல்பட்டு வரும் நிலையில், வருடாந்திர ஆய்வு பணி இன்று நடைபெற்றது.
மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் நேரில் வந்து ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற பொருட்கள் உள்பட வழக்கு சம்மந்தமான ஆவணப் பொருட்களை சரிபார்க்கும் பணிகளை மேற்கொண்டார். மாலை வரை நடைபெற்ற ஆய்வு பணி நிகழ்வில் திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கறிஞர்கள் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.